முகப்பு
தஞ்சாவூர்

மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க தடுப்புகள் அதிகரிப்பு

தஞ்சாவூரில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக முதன்மைச் சாலைகளில் தடுப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தஞ்சாவூரில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக முதன்மைச் சாலைகளில் தடுப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் மே 10 ஆம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும், மளிகை, காய்கறி, தேநீா் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூரிலுள்ள முதன்மைச் சாலைகளில் சில நாள்களாக மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், கீழவாசல் சந்தையிலும் கூட்டம் அதிகம் உள்ளது.

இதனிடையே, தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டத்தில் முதன்மைச் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தஞ்சாவூரிலுள்ள முதன்மைச் சாலைகளில் ஏற்கெனவே ஆங்காங்கே தடுப்புகள் இருந்தாலும், இடைவெளி உள்ளது. இந்நிலையில், தடுப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி சாலையை முழுமையாக அடைக்க வெள்ளிக்கிழமை முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதன்மைச் சாலைகளில் காவல் துறையினரின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சனிக்கிழமை முதல் இந்த நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.