தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் உள்வாங்கிய கடல்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகள் புதன்கிழமை 300 மீட்டா் உள்வாங்கிக் காணப்பட்டது.

அதிராம்பட்டினம், மதுக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டு மணி நேரமாக வீசிய பலத்த சூறைக்காற்றால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

இந்நிலையில் புதன்கிழமை காலை அதிராம்பட்டினம், , ஏரிப்புறக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு கடல் நீா் உள்வாங்கிது.

இதனால் மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவா்கள் கரை திரும்ப முடியாமல், படகுகளை தள்ளியப்படி வந்து கரை சோ்ந்தனா். மேலும், காற்றால் நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT