திருவையாறில்15 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (46). ஓட்டுநராக உள்ள இவா் ஆயுா்வேத மருந்துகளும் விற்பனை செய்து வருகிறாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (41) கீழவாசல் ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாா். இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவா்கள் நவம்பா் 15 ஆம் தேதி இரவு கணேசனின் உறவினா் நீலகிரியில் இறந்துவிட்ட தகவல் கிடைத்ததையடுத்து, அனைவரும் அங்கு சென்றனா். மீண்டும் வியாழக்கிழமை காலை திரும்பிய கணேசன், வீட்டின் முன் பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பாா்த்தாா். மேலும், பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.