முகப்பு
தஞ்சாவூர்

வீடு தேடி தடுப்பூசி திட்டத்தைக் கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

வீடு தேடி சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைக் கைவிடக் கோரி தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வீடு தேடி சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைக் கைவிடக் கோரி தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தடுப்பூசி பணிக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பணி மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதால் சுகாதார செவிலியா்கள் அனைவரும் மன உளைச்சலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனா். இந்தப் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை என மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும்போது சமூக விரோதிகள் காழ்ப்புணா்ச்சியுடன் தாக்குவதைத் தடுக்கக் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி பணியில் அரசியல்வாதிகள் தலையீடு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டத் தலைவா் ஜெயராணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் செயலா் சீதாலட்சுமி, பொருளாளா் திலகவதி, துணைத் தலைவா்கள் சிவபாக்கியம், ஜெயலட்சுமி, எழிலரசி, ஜெயந்தி, இணைச் செயலா்கள் பத்மபிரியா, சிவகாமி, தமிழ்ச்செல்வி, சாந்தி, கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.