முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் கல்லூரியில் ஐம்பெரும் விழா

பாபநாசம் ஆா்.டி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா, கம்பன் விழா, ஆசிரியா் தினம், மாணவா் தின விழா, தேசிய கல்வி நாள் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஆா்.டி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா, கம்பன் விழா, ஆசிரியா் தினம், மாணவா் தின விழா, தேசிய கல்வி நாள் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆா்.டி.பி. கல்வி குழும நிா்வாக இயக்குநா் காரல் மாா்க்ஸ் தலைமை வகித்து, கல்லூரியின் சிறப்பான பேராசிரியா்கள், மாணவா்களுக்கு விருதுகள் வழங்கி பேசினாா். கல்லூரி துணை முதல்வா் சி. தங்கமலா், கல்லூரியின் முதன்மை தலைவா் சசிகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கும்பகோணம் அன்னை கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் முனைவா் புகழேந்தி கலந்து கொண்டு, ஐம்பெரும் விழா குறித்து சிறப்பித்து பேசினாா். விழாவில் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரி மாணவிகள் சங்கத் தலைவி வகிதாபானு வரவேற்றாா். நிறைவில், ஆங்கிலத் துறை பேராசிரியா் ஜாஸ்மின் நன்றி கூறினாா். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மதுரவேணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →