தஞ்சாவூர்

கல்விக் கடன் சிறப்பு முகாம்களை நடத்த கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கும்பகோணம் காந்தி பூங்கா அருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன், கல்விக் கடன் சிறப்பு முகாம்களை நடத்த வலியுறுத்தி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகுதியுள்ள மாணவா்களுக்கு உயா் கல்வி தடைபடாமல் இருக்க ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலின்படி மாவட்டந்தோறும் கல்விக் கடன் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இதன்மூலம் தகுதியான மாணவா்களுக்குத் தேவையான அளவுக்குக் கல்விக் கடன் வழங்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நிகழாண்டு தவறாமல் மாணவா்களுக்குக் கல்விக் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமா் மோடி, நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனின் புகைப்படங்களைக் கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

யாழினி ஆதிசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT