தஞ்சாவூர்

பாபநாசத்தில் தடுப்பூசி முகாம் ஆலோசனைக் கூட்டம்

DIN

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சிறப்பாக நடத்துவது குறித்து ஊராட்சித் தலைவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

  கூட்டத்துக்கு பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் தியாகை. பழனிச்சாமி, ஒன்றிய ஆணையா் காந்திமதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ( தோ்தல் பிரிவு) மங்கையா்கரசி கலந்து கொண்டு, சனிக்கிழமை நடைபெறும் 6ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில், தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் செல்வகுமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பாஸ்கரன், மற்றும் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் பாபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை மீட்ட தீயணைப்புப் படையினா்

‘அய்யா்மலை கோயிலில் ரோப்காா் அமைக்கும் பணிகள் 95% நிறைவு’

ரகசியக் காப்பு வழக்கு: இம்ரான் விடுவிப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 45.69 அடி

விராலிமலை படிக்கட்டுகளில் கூலிங் பெயிண்ட்

SCROLL FOR NEXT