முகப்பு
தஞ்சாவூர்

பேருந்தில் பெண்ணிடம் 12 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் சுமாா் 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் சுமாா் 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவையாறு தில்லைஸ்தானம் கீழத்தெருவைச் சோ்ந்த கண்ணபிரான் மனைவி பத்மாவதி (47). இவா் திருவையாறு நீதிமன்றம் அருகே பேருந்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரிடமிருந்த சுமாா் 12 பவுன் நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.