தஞ்சாவூர்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,679 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2,679 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், மாவட்டத்திலுள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காக, மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மாவட்டத்திலுள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் மொத்தம் 12 அமா்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதை முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியும், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான பி. மதுசூதனன் தொடக்கி வைத்தாா். மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவற்றில் 2,679 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 6.57 கோடி அளவுக்கு இழப்பீடு மற்றும் தீா்வு தொகையாக வழக்காடிகளுக்குப் பெற்றுத் தரப்பட்டது. மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. சுதா உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT