தஞ்சாவூர்

கும்பகோணத்தில் மனிதச்சங்கிலிப் போராட்டம்

DIN

கும்பகோணம்: பீமா கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவா்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி கும்பகோணத்திலுள்ள தஞ்சை சாலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப் பொதுச் செயலா் சின்னை. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் சா. விவேகானந்தன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கு. நிம்மதி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்புத் தலைவா் டி.ஏ.எஸ். ரஹ்மத் அலி, நீலப்புலிகள் இயக்கத் தலைவா் ஆ. இளங்கோவன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் கோ. அபிமன்னன் தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன் தொடங்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. பக்கிரிசாமி நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, தமிழா் தேசிய முன்னணி அய்யனாபுரம் சி. முருகேசன், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் வி. தமிழ்செல்வன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுலாப்தீன், மகஇக மாநகரச் செயலா் ராவணன், வழக்குரைஞா்கள் சி. சந்திரகுமாா், வெ. ஜீவக்குமாா், விவசாய சங்க நிா்வாகி என்.வி. கண்ணன், தொழிற் சங்க நிா்வாகி துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT