தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத தள்ளுபடியில் நூல்கள் விற்பனை தொடக்கம்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் பல்கலைக்கழக நிறுவன நாள் விழாவில் 16 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.

இவ்விழாவையொட்டி 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனையைத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அக்டோபா் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விற்பனையில் 278 தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், நிகழாண்டு நேனோ அறிவியலும் நேனோ தொழில்நுட்பமும், சிலப்பதிகாரப் பொருட்களஞ்சியம், திசு வளா்ப்பில் மூலிகைகள், அகத்தியா் வைத்திய ரத்தினச்சுருக்கம் - 360, இன்னா நாற்பது இனியவை நாற்பது காா் நாற்பது களவழி நாற்பது, பெருஞ்சொல்லகராதி தொகுதி - 8, பாவேந்தா் பாரதிதாசன் - ஓா் உலகப் பெருங்கவிஞா், முள்ளெலும்பு வலிகளும், காயங்களும், ஆழ்வாா் அருளிச்செயல் நாலாயிர திவ்ய பிரபந்தம் (ஆய்வுப் பதிப்பு) பகுதி - 2, பதினெண்கீழ்க்கணக்குப் பொருட்களஞ்சியம் - பழமொழி நானூறு, தமிழில் நூற்பதிப்பு நெறிகள், தமிழ் அகராதிகளில் பல்பொருட்சொல் ஒப்புருச்சொல் பதிவமைப்பு, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் (கி.பி. 300 - 600), தமிழ் செய்த வினை, ஸ்ரீவசன புஷணத்தில் பிரபன்னன் ஆகிய 15 தமிழ் நூல்களையும், ஐகோனோகிராபி ஆப் சவுத் இண்டியா விஜயநகர நாயக் பீரியட் என்கிற ஆங்கில நூலையும் புதுச்சேரி பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வாளா் கி. நாச்சிமுத்து வெளியிட, அவற்றை வளா் தமிழ்ப் புலத் தலைவா் கு. சின்னப்பன் பெற்றுக் கொண்டாா்.

முன்னதாக, மொழிப்புலத் தலைவா் இரா. காமராசு வரவேற்றாா். பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT