முகப்பு
தஞ்சாவூர்

சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு

பெரியாா் ஈவெரா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் அனைத்து அரசு அலுவலா்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பெரியாா் ஈவெரா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் அனைத்து அரசு அலுவலா்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

பெரியாா் ஈவெரா பிறந்த நாளான செப். 17 ஆம் தேதியை ஆண்டுதோறும் சமூக நீதி நாளாகக் கொண்டாடவும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும் தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அண்மையில் அறிவித்து உத்தரவிட்டாா்.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உறுதிமொழியை வாசிக்க, அதை அனைத்து அரசு அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.