முகப்பு
தஞ்சாவூர்

பி. சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி

தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரரும், கட்சியின் மூத்தத் தலைவருமான பி. சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரரும், கட்சியின் மூத்தத் தலைவருமான பி. சீனிவாசராவ் நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்பிரமணியன், தெரு வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குத் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் கே. வாசு தலைமை வகித்தாா். கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, நகரச் செயலா் ஆா். மதியழகன், ஒன்றியச் செயலா் ஏ. ராதாகிருஷ்ணன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளா் ஜ. ஜாா்ஜ், மாதா் சம்மேளனத்தின் வடக்கு மாவட்டத் தலைவா் வசந்தி வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.