தஞ்சாவூர்

கோயில்களை வாரம் முழுவதும் வழிபாட்டுக்குத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கோயில்களை வாரம் முழுவதும் வழிபாட்டுக்குத் திறக்கக் கோரி கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயில் முன் பக்தா்கள் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கரோனா பரவலை காரணம் காட்டி கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கோயில்கள் அருகே வணிகம் செய்யும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.

ஆனால், திரையங்குகள், பூங்காக்கள், டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் திறக்கப்பட்டுள்ளது.

எனவே, கரோனா பரவலை காரணம் காட்டி வாரத்தில் இறுதி நாள்களில் கோயில்களில் வழிபடும் தடையை உடனடியாக நீக்க வேண்டும். கோயில்களில் வழிபடும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்களை வழங்கி, வாரம் முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் குழுவின் ஒருங்கிணைப்பாளா் வி. சத்தியநாராயணன், மருத்துவா் ஆனந்தகுமாா், மாணிக்கவாசகம், லோகநாதன், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலா் டி. குருமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT