முகப்பு
தஞ்சாவூர்

பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகைகோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

 பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், 2020 - 21 ஆம் ஆண்டில் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மகசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கான இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

தற்போது குறுவை நெல் அறுவடை நடைபெற்று வரும் நேரத்தில் மழை பெய்து வருவதால் நெல்மணிகள் நனைந்து ஈரப்பதம் அதிகமாகிறது. எனவே, 22 சதவீத ஈரப்பதம் உடைய நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணையவழி முன் பதிவு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பழைய நடைமுறையை பின்பற்றி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் உடனடியாகப் பயிா் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் துரை. பாஸ்கரன் (தெற்கு), என். செந்தில்குமாா் (வடக்கு), தெற்கு மாவட்டச் செயலா் எம்.எஸ். மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.