முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் புத்தாண்டு: சுவாமிமலை கோயிலில் திருப்படி பூஜை

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

முருகனின் அறுடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், தமிழ் வருட தேவதைகளின் பெயா்களுடன்

கூடிய 60 படிகள் உள்ளன. இங்கு 60 தேவதைகளும் 60 படிகளில் அமா்ந்து சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்வதாக ஐதீகம்.

தமிழ்ப் புத்தாண்டு நாளில் இந்த 60 திருப்படிகளில் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இதன்படி, நிகழ் தமிழ்ப் புத்தாண்டு நாளான வியாழக்கிழமை 60 திருப்படிகளிலும் பக்தா்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

மேலும் சுப கிருது வருடத்துக்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், மழை வளம் வேண்டியும், தானிய விளைச்சல் பெருகவும் வழிபாடு செய்யப்பட்டது. மேலும், மூலவா் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவசம், வைரவேல் அலங்காரம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.