தஞ்சாவூர்

தஞ்சை தேர் விபத்துக்கான காரணம்: மின் வாரிய தலைவர் ஆய்வு

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த மின் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை 3.06 மணியளவில் நடைபெற்ற அப்பர் மட தேரோட்டத்தின்போது 11 பேர் இறந்தனர். இந்த உடல்களை தமிழ்நாடு மின்சார வாரிய தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பார்வையிட்டனர். மேலும், களிமேடு கிராமத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்தையும் ஆய்வு செய்தனர்.

இதில், இறந்தவர்கள் யாரும் உடல் கருகி இறக்கவில்லை என்பது தெரிய வந்தது. உயர் மின்னழுத்த பாதையால் இறந்திருந்தால் உடல் முழுவதும் கருகி இறந்திருப்பர். மேலும் தானாகவே உயர் மின்னழுத்த பாதை 0.19 விநாடிகளில்  மின் துண்டிப்பு நடந்துள்ளது. 

எனவே உயர் அழுத்த மின் பாதையால் இந்த விபத்து ஏற்படவில்லை என்றும், தாழ்வழுத்த மின்சாரம் மூலமே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் மின் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். 

எனவே தாழ்வழுத்த மின்சாரம் தேருடன் இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மூலம் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் மின்வாரிய அலுவலர்களிடையே நிலவுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT