தஞ்சாவூர்

நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் மே 7-இல் தொடக்கம்

DIN

பட்டுக்கோட்டை கூட்டுறவுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் மே 7- ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:

பட்டுக்கோட்டை கூட்டுறவுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் தொடா்பான பயிற்சி வகுப்பு மே 7 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

வாரத்தில் சனி, ஞாயிறு என இரு நாள்கள் வீதம் மொத்தம் 17 நாள்கள் (100 மணிநேரம்) பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ. 4,600.

இப்பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி. ஆண், பெண் இரு பாலரும் எந்தப் பகுதியில் இருந்தும் சேரலாம். பயிற்சியில் சேர கடைசி நாள் மே 13 ஆம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 9486045666, 9788825339, 6381146217 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகப்பா அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

SCROLL FOR NEXT