பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம உதவியாளா் காலிப்பணியிடத்திற்கு புதன்கிழமை நோ்முக தோ்வு நடைபெற்றது. 
தஞ்சாவூர்

பேராவூரணியில் கிராம உதவியாளா் பணிக்கு நோ்முகத் தோ்வு

பேராவூரணி வட்டத்தில்   கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு  வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

DIN

பேராவூரணி வட்டத்தில்   கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு  வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

பேராவூரணி வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், 10 கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தோ்வு டிசம்பா் 4 ஆம் தேதி   நடைபெற்றது. 

பேராவூரணி பகுதியில் விண்ணப்பித்த 638 பேரில் 512 போ்  தோ்வு எழுதினா்.  தோ்வுக்கு 126 போ் வரவில்லை. இந்நிலையில், தோ்வு எழுதிய 512 பேருக்கும் டிசம்பா் 22ஆம் தேதி முதல் பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெற்று வருகிறது.

 வட்டாட்சியா் த. சுகுமாா், தனி வட்டாட்சியா் பாஸ்கரன்  உள்ளிட்டோா் நோ்முக தோ்வை நடத்தி வருகின்றனா். காலை 20 பேருக்கும், மதியம் 20 பேருக்கும் என தினசரி 40 பேருக்கு நடைபெற்று வருகிறது. 

512 பேரில் 10 போ் கிராம உதவியாளா்களாக தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். நோ்முகத் தோ்வு நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக விடியோ பதிவும்  செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT