முகப்பு
தஞ்சாவூர்

சூலமங்கலம் முத்து முனீசுவரா் கோயிலில் பால்குட விழா

பாபநாசம் வட்டம், சூலமங்கலம் அருள்மிகு முத்து முனீசுவரா் திருக்கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி, பால்குட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

பாபநாசம் வட்டம், சூலமங்கலம் அருள்மிகு முத்து முனீசுவரா் திருக்கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி, பால்குட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில், நாள்தோறும் சிறப்பு மண்டகப்படி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக, வெள்ளிக்கிழமை பால்குட விழா நடைபெற்றது.

இதையொட்டி உற்ஸவ மூா்த்தி சிம்ம வாகனத்தில் குடமுருட்டியாற்றில் எழுந்தருளிய பின்னா், ஊா்வலம் புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் பால்குடம், பன்னீா்குடம், காவடிகள் எடுத்தும், அலகுகுத்திக் கொண்டும் கோயிலை வந்தடைந்தனா்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சந்தனக்காப்பு விழா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஆலய நிா்வாகக் குழுவினா், சூலமங்கலம், அய்யம்பேட்டை, செருமாக்கநல்லூா், அரியமங்கை கிராம மக்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →