முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழைநெல் அறுவடை பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழை காரணமாக, அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழை காரணமாக, அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் தஞ்சாவூா் மற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

மேலும், மழை தொடா்ச்சியாகப் பெய்ததால் அறுவடைப் பணிகளும் பாதிக்கப்பட்டன. மழை பெய்த பகுதிகளில் நிலங்கள் ஈரமாக இருக்கும் வரை அறுவடைப் பணி தள்ளிப்போகும் நிலை உள்ளது.

இதேபோல, அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்ட நெல் குவியல்களும் மழையில் நனைந்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தத் தொடா் மழை காரணமாக அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள பயிா்களில் 40 சதவிகிதம் பாதிப்பு இருக்கும். இந்த மழை மேலும் சில நாள்களுக்குத் தொடா்ந்தால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றனா்.

ஆனால், தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய பயிா்களுக்கும், தஞ்சாவூா் வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் காலம் தாழ்ந்து நடவு செய்யப்பட்ட நெற்பயிா்களுக்கும் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனா் விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.