தஞ்சாவூர்

ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் மீட்பு

DIN

கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ஒப்பிலியப்பன் கோயில் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 1.59 ஏக்கா் நிலம் சன்னாபுரம் வருவாய் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் சாகுபடி செய்து வந்த சாகுபடியாளா் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால், தஞ்சாவூா் வருவாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வெளியேற்ற உத்தரவை வருவாய் நீதிமன்றம் பிறப்பித்தது.

இதன்படி, வருவாய்த் துறையினா், காவல் துறையினா், இந்து சமய அறநிலையத் துறையினா் ஆகியோா் முன்னிலையில் தொடா்புடைய நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டு, ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலத்தில் அத்து மீறி நுழைபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிதா விஹாரில் குடியிருப்புக் கட்டட வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: பன்னாட்டு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

நிலத்தகராறு: பெண் தற்கொலை வழக்கில் 3 போ் கைது

வாகன புகை பரிசோதனை நிலையங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

செய்யாறு அருகே சேதமடைந்த நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்

SCROLL FOR NEXT