எம்எல்ஏ என். அசோக்குமார் 
தஞ்சாவூர்

பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாருக்கு கரோனா

பேராவூரணி திமுக எம்எல்ஏ என்.அசோக்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி திமுக எம்எல்ஏ என்.அசோக்குமாருக்கு(64)  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக அவருக்கு  இருமல், தொண்டை கரகரப்பு இருந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில்  ஞாயிற்றுக்கிழமை தமது இல்லத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கடந்த இரண்டு நாள்களாக அவரோடு நெருங்கிய  தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது மகன் கீர்த்திக்கும் (35) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதயைடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி இருவரும் தங்களை வீட்டில்  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கரோனா காரணமாக வீட்டில்  தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக எம்எல்ஏ தனது முகநூல் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT