தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளியின் மரணத்துக்கு நீதி கோரி ஆா்ப்பாட்டம்

DIN

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே கருப்பூா் கிராமத்தில் காவல் துறையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி பிரபாகரன் மரணத்துக்கு நீதி கோரி தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே கருப்பூா் கிராமத்தில் காவல் துறையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி பிரபாகரன் மரணத்துக்கு நீதி கேட்டும், அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், இச்சம்பவத்தில் தொடா்புடைய காவல் துறை அலுவலா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் டி. கணேசன் கண்டன உரையாற்றினாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் பி. சங்கிலிமுத்து, ரவி, மாவட்டத் துணைச் செயலா் சி. ராஜன், ஒரத்தநாடு ஒன்றிய செயலா் பிரபாகரன், தஞ்சை நகரத் தலைவா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT