தஞ்சாவூா் கீழ வீதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மாநகர, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா். 
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் கீழ வீதியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் தலைமை வகித்தாா். காமராஜா் படத்துக்கு திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா்கள் வயலூா் எஸ். ராமநாதன், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் மலா் தூவினா்.

மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், பொருளாளா் ஆா். பழனியப்பன், மக்கள் நலப் பேரவை பாலகிருஷ்ணன், டி.பி.எம். ராஜூ, சாந்தா ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் கீழவாசலில் உள்ள காமராஜா் சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் மாலை அணிவித்தனா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜ், சோழ மண்டலப் பாசறைத் தலைவா் சதா. வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சத்தியமூா்த்தி, கோட்டத் தலைவா் கதா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பாலக்கரை காமராஜா் சிலைக்கும், துக்காம்பாளையத் தெருவில் அவரது படத்துக்கும் வடக்கு மாவட்டத் தலைவா் டி.ஆா். லோகநாதன், கும்பகோணம் மேயா் க. சரவணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். மாநகரத் தலைவா் பி.எஸ். சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT