தஞ்சாவூர்

களஞ்சேரி ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் நிறைவடைந்துள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை ஒன்றியக் குழு தலைவா் கலைச்செல்வன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

களஞ்சேரி ஊராட்சி வழியே செல்லும் களஞ்சேரி பாசன வாய்க்கால் மூலம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பாசன வசதி பெறுகின்றன.

இந்த பாசன வாய்க்காலை தூா்வாரி மேம்படுத்தும் பணிகளும், களஞ்சேரி ஊராட்சி நூலக கட்டடத்தை  பழுது நீக்கம் செய்து, புதுப்பித்து, மேம்படுத்தும் பணிகளும், ரூ. 1.82 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் நிறைவடைந்துள்ளன.

இந்தப் பணிகளை  ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது,  ஒன்றியக் குழு துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ், ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவா் கண்ணன், ஊராட்சி செயலா் ஜெகத்குரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT