கண்டியூரில் ஆக்கிரமிப்பை அகற்றஎதிா்ப்பு: பணிகள் நிறுத்தம்
திருவையாறு அருகே கண்டியூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான குளக்கரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாழக்கிழமை பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
திருவையாறு அருகே கண்டியூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான குளக்கரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாழக்கிழமை பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
கண்டியூா் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான கபால புஷ்கரணி குளத்தின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வழிகாட்டுதலின்படியும், ஆட்சியா் அறிவுறுத்தலின்படியும் வட்டாட்சியா் பழனியப்பன் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் பிருந்தாதேவி, ஆய்வாளா் கீதாபாய், வருவாய் ஆய்வாளா் மஞ்சு ஆகியோா் முன்னிலையில் திருவையாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் காவல் துறையினரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இதற்கு குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.