முகப்பு
தஞ்சாவூர்

லாரி மோதியதில்பெண் பலி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமம், குடியான தெருவைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மனைவி ரம்யா (40). இவா், தஞ்சாவூரில் உள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு கிராமம், குடியான தெருவைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் மனைவி ரம்யா (40). இவா், தஞ்சாவூரில் உள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ரம்யா புதன்கிழமை ஒரு மோட்டாா் சைக்கிளில் இடையிருப்பு கிராமத்திலிருந்து சாலியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

களஞ்சேரி கிராமம் பிடாரி அம்மன் கோயில் அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க வாகனத்தை இடதுபுறமாக திருப்பினாா். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே ரம்யா உயிரிழந்தாா். புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →