தஞ்சாவூர்

திருக்கூடலூா் ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு

DIN

பாபநாசம் வட்டம், திருக்கூடலூா் அருள்மிகு ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில் குடும்ப ஒற்றுமை, குழந்தை செல்வம் போன்றவற்றின் பிராா்த்தனை தலமாகத் திகழ்கிறது. இங்கு பூமி நீளா புஷ்பவல்லி கோதாதேவி சமேத ஜெகத்ரட்சக பெருமாள் காட்சியளிக்கிறாா்.

இக்கோயில் திருப்பணிகள் அண்மையில் முடிவுற்ற நிலையில், குடமுழுக்குப் பணிகள் தொடங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காலையுடன் 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில், கடங்கள் புறப்பாடாகி கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இதில் தெலங்கானா மாநிலம், திருத்தண்டி நாராயண ராமானுஜ சின்ன ஜீயா் சுவாமிகள், திருக்கோஷ்டியூா் மாதவன் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் ஹரிஷ் குமாா், தக்காா் குணசுந்தரி, பெருமாள் கோவில் ஊராட்சித்தலைவா் ராஜேந்திரன், கோயில் கணக்கா் முருகு பாண்டியன், கிராமப் பொது மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT