தஞ்சாவூர்

பேராவூரணியில் முதியோா் கொடுஞ்செயல்எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள ஆவணத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். தவமணி தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ் உறுதிமொழியை வாசித்தாா். முதியோா்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரிப்போம், மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வாா்த்தைகளை உபயோகிக்க மாட்டோம், முதியோா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிப்போம், பொது இடங்களிலும் மருத்துவமனை, வங்கி, பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில்  முதியோா்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவா்களுக்கெதிரான  கொடுஞ்செயல்கள், வன்முறைகள் இழைக்கப்படுவதை தடுக்க பாடுபடுவேன் என்று  உளமார உறுதி கூறுகிறேன் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் அனைத்துப் பிரிவு அலுவலா்களும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT