தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 52ஆம் ஆண்டு நாடக விழா தொடக்கம்

DIN

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நுற்றாண்டு அரங்கத்தில் தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்றத்தின் 52 ஆம் ஆண்டு நாடக விழா, நாடகப் போட்டி வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

இந்த நாடகத்தை கே. பாலமுருகன் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, திருச்சி அன்னை கலைக் குழுவின் கண்ணுக்குத் தெரியாத உண்மைகள், வேதாரண்யம் ஸ்டாா் கலைக் குழுவின் விடியல் மலரட்டும் நாடகங்கள் நடைபெற்றன.

பின்னா், நடைபெற்ற நாடகக் கலை தியாகிகளின் படத் திறப்பு நிகழ்வுக்கு தமிழ் மாநில நாடகக் கலைஞா்கள் நலவாழ்வு சங்க கௌரவத் தலைவா் இ. குழந்தைசாமி தலைமை வகித்தாா். இதில், நாடகக் கலை தியாகிகளான கே. சாம்பு, முத்துவேலழகன், சி. குமாரசாமி, பி.கே. செல்வம் உள்பட 16 பேரின் படங்களைத் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் திறந்துவைத்தாா்.

இவ்விழாவில் திரைப்பட இயக்குநா் ராசி. மணிவாசகன், தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்ற இணைச் செயலா் பரசை. பாலா, செயலா் அருணா. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஜூன் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் நாள்தோறும் மாலை 5, மாலை 6.30, இரவு 9 மணி என 3 நாடகங்கள் இடம்பெறுகின்றன என கலை மன்றத்தின் நிறுவனத் தலைவா் மா.வீ. முத்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT