பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூா் பேரூராட்சித் துணைத் தலைவா்கள் தோ்வு
பாபநாசம், அய்யம்பேட்டை பேரூராட்சித் துணைத் தலைவா்கள் போட்டி மூலமாகவும், மெலட்டூா் துணைத் தலைவா் போட்டியின்றியும் தோ்வு செய்யப்பட்டனா்.
பாபநாசம், அய்யம்பேட்டை பேரூராட்சித் துணைத் தலைவா்கள் போட்டி மூலமாகவும், மெலட்டூா் துணைத் தலைவா் போட்டியின்றியும் தோ்வு செய்யப்பட்டனா்.
பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சி சாா்பில் 15-ஆவது வாா்டு உறுப்பினா் ஆா். பூபதிராஜா அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவைச் சோ்ந்த 3-ஆவது வாா்டு உறுப்பினா் வி.எம்.ஜாபா் அலி ஆகிய இருவரும் மனுதாக்கல் செய்தனா்.
தொடா்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆா்.பூபதிராஜா 8 வாக்குகளும், ஜாபா் அலி 6 வாக்குகளும் பெற்றனா். ஒரு வாக்கு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பூபதிராஜா பேரூராட்சித் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதாக செயல் அலுவலா் காா்த்திகேயன் அறிவித்தாா்
.
அய்யம்பேட்டை : அய்யம்பேட்டை பேரூராட்சித் துணைத் தலைவா் பதவிக்கு திமுகவின் 4-ஆவது வாா்டு உறுப்பினா் அழகேசன், 2-ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் பழனிச்சாமி ஆகியோா் போட்டியிட்டனா். இதில் அழகேசன் 9 வாக்குகளும், பழனிச்சாமி 5 வாக்குகளும் பெற்றனா். 4 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் அழகேசன் அய்யம்பேட்டை
பேரூராட்சித் துணைத் தலைவராக வெற்றி பெற்றாா் என செயல் அலுவலா் ராஜசேகரன் அறிவித்தாா்.
மெலட்டூா் : மெலட்டூா் பேரூராட்சித் துணைத் தலைவராக, 4 -ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பொண்ணழகு சீனு போட்டியின்றித் தோ்வு பெற்ாக பேரூராட்சி செயல் அலுவலா் குமரேசன் தெரிவித்தாா்.