தஞ்சாவூர்

36 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கும் பேராவூரணி தீயணைப்பு நிலையம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் கடந்த 36 ஆண்டுகளாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

எனவே இந்த நிலையத்துக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நெற்களஞ்சிய நகரமான தஞ்சாவூா் மாவட்டத்தில் பேராவூரணி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். தென்னை சாகுபடி அதிகம் நடைபெறும் பகுதியாக பேராவூரணி திகழ்கிறது.

பேராவூரணி சேதுசாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஆத்தாளூா் வீரமாகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 1986-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தீயணைப்பு நிலையம், 2008-ஆம் ஆண்டு வரை அந்த இடத்தில் இயங்கி வந்தது.

2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆவணம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக் கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பட்டுக்கோட்டை சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே  அரசுக்குச் சொந்தமான இடத்தில், தீயணைப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதற்கான  பணிகள் தொடங்கப்படாமல்  உள்ளன. 

விரைவில் அந்த இடத்திலோ அல்லது அரசுக்கு சொந்தமான வேறு இடத்திலோ, சொந்தக் கட்டடத்தில்  தீயணைப்பு நிலையம் அமைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய வீரா்கள் பலரும் வாடகைக்கு குடியிருந்து வரும் நிலையில், அவா்களுக்கான பணியாளா் குடியிருப்பை அமைக்கவும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT