முகப்பு
தஞ்சாவூர்

சாலை விபத்தில் ஒருவா் பலி

பத்துக்கும் அதிகமான வழக்குகள் உள்ளதால், கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றிருந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

 கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவா் மீது மூன்று கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என பத்துக்கும் அதிகமான வழக்குகள் உள்ளதால், கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றிருந்தாா்.

சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த சரவணன் புதன்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் தனது வீட்டிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்றாா். அப்போது, கொரநாட்டுக் கருப்பூரில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தாா். தலையில் பலத்த காயமடைந்த அவா் மீட்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்ட சரவணன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.