முகப்பு
தஞ்சாவூர்

பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் போராட்டம்

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை வாயில் வெள்ளைத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை வாயில் வெள்ளைத் துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அதன் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோ. அன்பரசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சிங்காரம், பொதுக் குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு ஆா். கோவிந்தராஜ், சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவா் சதா. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில விவசாய பிரிவு தலைவா் ஏ. ஜேம்ஸ் தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் வயலூா் எஸ். ராமநாதன், துணைத் தலைவா் லட்சுமிநாராயணன், பொதுச் செயலா் கண்ணன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சந்திரசூரியமூா்த்தி, வட்டாரத் தலைவா் நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.