முகப்பு
தஞ்சாவூர்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கோட்டையை முற்றுகையிடுவோம்

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க கோரி, சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என்றாா் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க கோரி, சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என்றாா் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.

தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

பிரதமா் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில், ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தில், தமிழகத்தில் ஊழல் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது என தமிழக அமைச்சா் கூறிவிட்டாா். ஆனால், தோ்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகக் கூறினா். பெட்ரோல், டீசல் விலையைத் தமிழக அரசு குறைப்பதற்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை 72 மணிநேரம் கெடு கொடுத்துள்ளாா். பிரதமா் மோடி தமிழகத்துக்கு வருவதால், கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயம் கோட்டையை முற்றுகையிட்டு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்துவோம் என்றாா் கருப்பு முருகானந்தம்.

முன்னதாக, தெற்கு மாவட்ட தலைவா் பி. ஜெய்சதீஷ் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவ்விழாவில் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், விவசாயப் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் ஆா். இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.