தஞ்சாவூர்

லஞ்சம்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளா்ச்சி அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் தில்லை நகா் சேரன் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் வி. சரவணன் (44). இவா் ரெடிமேட் சுற்றுச்சுவா், ஹாலோ பிளாக் அமைப்பது போன்ற வேலைகளைச் செய்து வருகிறாா்.

இவா் திருவையாறு ஒன்றியத்துக்குள்பட்ட செம்மங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதி பெற்று தண்ணீா் குழாய்க்கான 14 சிமென்ட் தளங்களை அண்மையில் அமைத்துக் கொடுத்தாா். இதற்காக இவருக்கு ஒரு சிமென்ட் தளத்துக்கு ரூ. 6,500 வீதம் ரூ. 91,000 வழங்கக் கோரி, திருவையாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 15 நாள்களுக்கு முன்பு அறிக்கை அளித்தாா்.

ஆனால், இத்தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க ரூ. 10,000 கொடுக்க வேண்டும் என சரவணனிடம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வி. ராஜதுரை (52) கேட்டாா். இந்த வேலையில் அவ்வளவு லாபம் கிடைக்காது என்பதால், அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க இயலாது என சரவணன் தெரிவித்தாா். அதன் பிறகு ரூ. 5,000 கொடுத்தால்தான், வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப முடியும் என ராஜதுரை கூறினாராம்.

இதை கொடுக்க விரும்பாத சரவணன், தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் செய்தாா். இதையடுத்து, காவல் துறையினா் வழக்குப் பதிந்து திருவையாறு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இரவு மறைந்திருந்து கண்காணித்தனா். அப்போது, சரவணனிடமிருந்து ரூ. 5,000 வாங்கிய ராஜதுரையை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், ராஜதுரை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ராஜதுரை கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT