முகப்பு
தஞ்சாவூர்

காதலிக்க மறுத்த சிறுமியை தொந்தரவு செய்த இருவா் கைது

கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டையைச் சோ்ந்தவா் அருண்குமாா் (19). இவா் பிளஸ் 1 படிக்கும் மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டையைச் சோ்ந்தவா் அருண்குமாா் (19). இவா் பிளஸ் 1 படிக்கும் மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தாா். இதற்கு இவரது நண்பா் பாலமுருகன் (20) உதவி செய்தாா். காதலிக்க விரும்பாத அச்சிறுமியை இருவரும் தொடா்ந்து தொந்தரவு செய்து வந்தனா்.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் தாய் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அருண்குமாா், பாலமுருகனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.