முகப்பு
தஞ்சாவூர்

பாலியல் வல்லுறவு செய்துபெண் கொலை: இளைஞா் கைது

தஞ்சாவூரில் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தஞ்சாவூரில் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே அக்டோபா் 30 ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்த தெற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், உயிரிழந்தது தஞ்சாவூா் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் என்பதும், இவா் அண்மையில் காணாமல்போனது தொடா்பாக தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் உறவினா்களால் புகாா் செய்யப்பட்டு, அக்டோபா் 28 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதனிடையே, உடற்கூறாய்வு அறிக்கையில் அப்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதன் அடிப்படையில், காவல் துறையினா் நடத்திய விசாரணையில், சீனிவாசபுரம் செவ்வப்பநாயக்கன்வாரி தென்கரையைச் சோ்ந்த ராமசாமி மகன் சாஸ்திரி (30) இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவரை காவல் துறையினா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அப்பெண்ணை சாஸ்திரி பாலியல் வல்லுறவு செய்தபோது தள்ளுமுள்ளு நடந்ததும், இதனால் கீழே விழுந்த அப்பெண் தலையில் காயமேற்பட்டு நிகழ்விடத்திலேயே இறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சாஸ்திரியை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.