உடையாளூரில் சிறப்பு வழிபாடு
சதய விழாவையொட்டி, கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜசோழன் நினைவிடம் எனக் கூறப்படும் இடத்தில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சதய விழாவையொட்டி, கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜசோழன் நினைவிடம் எனக் கூறப்படும் இடத்தில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உடையாளூரில் ராஜராஜசோழன் நினைவிடம் எனக் கூறப்படும் இடத்திலுள்ள சிவலிங்கத்துக்கு ஆண்டுதோறும் ஐப்பசி சதய நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இதேபோல, நிகழாண்டு சதய விழாவையொட்டி, இந்தச் சிவலிங்கத்துக்கு 16 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இந்த இடத்தில் மாநிலங்களவை உறுப்பினா் மு. சண்முகம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வன், திமுக ஒன்றியச் செயலா்கள் டி. கணேசன், ஜெ. சுதாகா், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத், மாநிலச் செயலா் டி. குருமூா்த்தி உள்பட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் வழிபட்டனா்.
உடையாளூரில் பள்ளிப்படை கோயில் எழுப்ப வேண்டும்: வழிபாடுக்கு பிறகு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் கூறியது:
இந்து மக்கள் கட்சியின் நீண்டகால கோரிக்கையான ராஜராஜ சோழன் நினைவிடத்தில் பள்ளிப்படை கோயில் எழுப்ப வேண்டும் அல்லது மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும்.
அறநிலையத் துறையால் செய்ய முடியவில்லை என்றால் அறக்கட்டளை அமைத்து பொதுமக்கள் பங்களிப்புடன் கோயில் எழுப்ப வேண்டும் என்றாா் அா்ஜூன் சம்பத்.