தஞ்சாவூர்

அவ்வை நடராசன் மறைவு: தமிழ்ப் பல்கலை.யில் இரங்கல் கூட்டம்

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் அவ்வை. நடராசன் மறைவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன் தலைமை வகித்தாா்.

இதில், அவ்வை நடராசன் மிகச் சிறந்த தமிழறிஞா், சிந்தனையாளா், பேச்சாளா் என்றும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவா் எனவும், தமிழக அரசின் கலைமாமணி விருது, பேரறிஞா் அண்ணா விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவா் என்றும், வாழ்விக்க வந்த வள்ளலாா், பேரறிஞா் அண்ணா, கம்பா் காட்சி, பாரதி பல்சுவை, கம்பா் விருந்து, திருப்பாவை விளக்கம் உள்பட பல்வேறு படைப்புகளை வழங்கினாா் எனவும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினா்கள், புலத் தலைவா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவல் நிலைப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு அவரது படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நாட்டாா் கல்லூரியில்...: இதேபோல, நாவலா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரியில், அவ்வை நடராசன் மறைவுக்கு புகழஞ்சலிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், இந்நூற்றாண்டின் மேடைத் தமிழறிஞராகத் திகழ்ந்த அவ்வை நடராசனின் மறைவு செவ்விலக்கிய ஆளுமைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும், இக்கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இதன் வளா்ச்சிக்கு உதவியவா் எனவும் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவா் மு. இளமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வா் இரா. தமிழ்ச்செல்வன், செயலா் இரா. கலியபெருமாள், முனைவா் வி. பாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT