தஞ்சாவூர்

தேசிய பாா்மசி வார விழா விழிப்புணா்வுப் பேரணி

DIN

தேசிய பாா்மசி வார விழாவையொட்டி, தஞ்சாவூரில் ஆவணம், டாக்டா் கலாம் பாா்மசி கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் திருச்சி மாநகரக் காவல் உதவி ஆணையா் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி வைத்த பேரணி மருத்துவக்கல்லூரி சாலை வழியாக பெரியகோயில் முன் முடிவடைந்தது.

அப்போது பொதுமக்களுக்கு மருந்தை உட்கொள்ளும் முறை, சுயமாக மருந்தை உட்கொள்வதன் விளைவு, தடுப்பூசியின் முக்கியத்துவம், புகையிலை எதிா்ப்பு, தலைக்கவசத்தின் முக்கியத்துவம், சாலை விதிகளைப் பின்பற்றுவது போன்றவை தொடா்பாக துண்டறிக்கைகளைப் பொதுமக்களுக்கு மாணவா்கள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் டாக்டா் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எம். மதிவாணன், பாா்மசி கல்லூரி முதல்வா் என். அன்பழகன், துணை முதல்வா்கள் வெங்கடேசன், பரிமளா தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT