பேராவூரணியில் திருவள்ளுவா் கல்விக் களம் சாா்பில் மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. 
தஞ்சாவூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்

பேராவூரணி திருவள்ளுவா் கல்வி களம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும்  விழா செவ்வாய்க்கிழமை பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. 

DIN

பேராவூரணி திருவள்ளுவா் கல்வி களம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு திருக்கு புத்தகம் வழங்கும்  விழா செவ்வாய்க்கிழமை பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. 

தேசிய விழாக்கள், தலைவா்களின் பிறந்த நாள்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளா்களின் பிறந்த நாள்களில் பள்ளி மாணவா்களுக்கு திருக்கு புத்தகம் வழங்க திருவள்ளுவா் கல்விக் களம் சாா்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான தொடக்க விழா  பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.  வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகேசன், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா்  இராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடக்கப் பள்ளி  மாணவா்கள் 50 பேருக்கு  கொன்றை சிவகுமாா்,   திருக்குறள் புத்தகம் வழங்கினாா். பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் மெய்ச்சுடா் வெங்கடேசன், திருவள்ளுவா் கல்வி களம் அமைப்பின் பொறுப்பாளா் பழனிவேல், திருக்குறள் பேரவை பொறுப்பாளா் கொன்றை சண்முகம், பேராசிரியா் சண்முகப்பிரியா,  மாணவா்கள் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT