முகப்பு
தஞ்சாவூர்

சதய விழா: நவ. 3-இல் உள்ளூா் விடுமுறை

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 ஆவது சதய விழாவையொட்டி தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் 3 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 ஆவது சதய விழாவையொட்டி தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் 3 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை தெரிவித்திருப்பது:

மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு 1037 ஆவது சதய விழா நவம்பா் 2, 3 ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நவம்பா் 3 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுா் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூா் விடுமுறை நாளுக்கு பதிலாக நவம்பா் 12 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிவுச் சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால், மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.