முகப்பு
தஞ்சாவூர்

பட்டா பெற அழைப்பு

பட்டுக்கோட்டை அருகே பட்டா பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே பட்டா பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன் கூறியது:

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூா் கிராமம், சூரியநாராயணபுரத்தில் தமிழ்நாடு இனாம் ஒழிப்பும் மற்றும் ரயத்துவாரியாக மாற்றலும் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை அமல்படுத்திடும் வகையில் நில அளவைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நிலவரித் திட்டப் பணிகளை தொடங்கிடும் பொருட்டு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை (அரசாணை நிலை எண் 265, நாள் 14.06.2022-ன்படி) வருவாய் கோட்ட அலுவலரை, நிலவரித் திட்ட அலுவலா்களாக நியமித்து, பணிகளை மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, பட்டுக்கோட்டை வட்டம், சூரியநாராயணபுரம் இனாம் கிராமத்தில் நிலவரித் திட்டப் பணிகளைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், இக்கிராமத்தில் ரயத்துவாரி பட்டா பெறத் தகுதியுடையவா்கள் பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்ட அலுவலகத்தை அணுகி விண்ணப்ப படிவம் 4-ஐ அளித்திட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.