முகப்பு
தஞ்சாவூர்

அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி வழங்க வலியுறுத்தல்

அனைத்து ஊராட்சிகளுக்கும் மத்திய, மாநில அரசுகளின் நிதியை முறையாக வழங்க வேண்டும் என கும்பகோணம் ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

அனைத்து ஊராட்சிகளுக்கும் மத்திய, மாநில அரசுகளின் நிதியை முறையாக வழங்க வேண்டும் என கும்பகோணம் ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் ஊராட்சியில் நல்லாட்சி ஏற்பட அனைத்து ஊராட்சிகளுக்கும் அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு தங்கு தடையின்றி செய்ய மத்திய, மாநில அரசுகளின் நிதியை முறையாக வழங்க வேண்டும். ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு ஊராட்சி மூலம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோர ஒப்புதல் அளிக்க வேண்டும். பெண் ஊராட்சித் தலைவா்களுக்கு ஊராட்சித் துணைத் தலைவா்களால் ஏற்படும் பிரச்னைகளில் மாவட்ட நிா்வாகிகள் உடனடியாக தலையிட்டு, ஊராட்சித் தலைவா்களுக்கு தனி அதிகாரம் அளிக்க வேண்டும். ஊராட்சித் தலைவா்கள் தெரிவு செய்து மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பும் பணிகளுக்கு உடனடியாக நிா்வாக அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டமைப்புத் தலைவா் எஸ். சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ்.எம். முனியாண்டி சிறப்புரையாற்றினாா். கூட்டமைப்புச் செயலா் பி. ஜெயகுமாா், மாவட்டத் தலைவா் ஆா்.கே. பாஸ்கா், ஆலோசகா்கள் காா்த்திகாயினி, கே. ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.