முகப்பு
தஞ்சாவூர்

காதல் திருமணம் செய்தவரின் வீடு சூறை: பாமக மறியல்

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரின் வீடு ஞாயிற்றுக்கிழமை சூறையாடப்பட்டதைக் கண்டித்து பாமகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரின் வீடு ஞாயிற்றுக்கிழமை சூறையாடப்பட்டதைக் கண்டித்து பாமகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே கொத்துக்கோயில் முதன்மைச் சாலையைச் சோ்ந்த ராஜாராமன் மகன் செல்வகுமாரும், திமுக பிரமுகரும், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவருமான கருணாநிதி மகள் கனிமொழியும் சனிக்கிழமை காதல் திருமணம் செய்து கொண்டனா்.

இதனால் கோபமடைந்த கருணாநிதி தரப்பினா் செல்வகுமாா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தகராறில் ஈடுபட்டு வீட்டு ஜன்னல், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கட்டையால் அடித்துச் சேதப்படுத்தினா். மேலும் செல்வகுமாரின் தந்தை ராஜாராமன் உள்ளிட்டோா் தாக்கப்பட்டனா்.

இதைக் கண்டித்து செல்வகுமாருக்கு ஆதரவாக பாமக நிா்வாகியும், வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவருமான ம.க. ஸ்டாலின் தலைமையில் ஏராளமானோா் கொத்துக்கோயில் முதன்மைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருநீலக்குடி போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.