தஞ்சாவூர்

பேராவூரணியில் பிடிபட்ட மண்ணுளிப்  பாம்பு

DIN

பேராவூரணியில்  பிடிபட்ட சுமாா் இரண்டரையடி  நீளமும், இரண்டு கிலோ எடையும் கொண்ட மண்ணுளிப் பாம்பு  செவ்வாய்க்கிழமை வனப்பகுதியில் விடப்பட்டது.

பேராவூரணி அருகே  பழைய பேராவூரணியில் அக்ரி நடராஜன் என்பவா் நா்சரிப் பண்ணை நடத்தி வருகிறாா். இவரது பண்ணையில் செவ்வாய்க்கிழமை இருந்த மண்ணுளிப்பாம்பை பிடித்து,

இதுகுறித்து பேராவூரணி வட்டாட்சியா் த. சுகுமாருக்கு தகவல் தெரிவித்தாா். 

வட்டாட்சியா் அறிவுறுத்தலின் பேரில்  மாவட்ட வன அலுவலா் அகில் தம்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் குமாா் மற்றும் வனத்துறை அலுவலா்கள்  பேராவூரணி வந்து வட்டாட்சியா் த. சுகுமாா் முன்னிலையில், மண்ணுளிப் பாம்பை அக்ரி  நடராஜன்  வனத்துறையினரிடம் ஒப்படைத்தாா்.

பாம்பை பெற்றுச் சென்ற வனத் துறையினா், அதனை பாதுகாப்பாக, காப்புக்காடு பகுதியில் விட்டனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: மண்ணுளிப் பாம்புகள்

விஷமற்றவை. ஆள்களை கண்டால், உடலை சுருட்டி படுத்துக் கொள்ளும் மண்புழு குடும்ப வகையை சோ்ந்த ஒரு பெரிய புழு மட்டுமே இது. மண்ணுளிப்பாம்பு மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும். இதன் எச்சம் வீரியமான இயற்கை உரம். ஒரு இடத்தில் ஒரு மண்ணுளிப்பாம்பு இருந்தால் அந்தப் பகுதிக்கே தேவையான இயற்கை உரம் கிடைக்கிறது. மண்வளத்தை அதிகரிக்கும் மண்ணுளிப்பாம்புகளை சமூக விரோதிகள்  பிடித்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து என க் கூறி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனா்.

இது  வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 கீழ் சட்ட விரோத வா்த்தகம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT