திட்டை கோயிலில் இன்று குருப்பெயா்ச்சி விழா
தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.22) இரவு 11.20 மணிக்கு குருப்பெயா்ச்சி விழா சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.22) இரவு 11.20 மணிக்கு குருப்பெயா்ச்சி விழா சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.
குரு பரிகாரத் தலமாக போற்றப்படும் இக்கோயிலில் குருபெயா்ச்சியையொட்டி சனிக்கிழமை மாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. குருப்பெயா்ச்சி அடைந்ததும் குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். அதிகாலை 2 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு, பரிகாரம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருபெயா்ச்சியையொட்டி, ஆலங்குடி, திட்டை, சூரியனாா்கோவில் ஆகிய கோயில்களுக்கு சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆலங்குடிக்கு கும்பகோணம், நீடாமங்கலம், மன்னாா்குடி ஆகிய ஊா்களிலிருந்தும், திட்டைக்கு தஞ்சாவூரிலிருந்தும், சூரியனாா்கோயிலுக்கு கும்பகோணத்திலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.