திருவையாறு புஷ்ப மண்டபத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு 
தஞ்சாவூர்

திருவையாறு புஷ்ப மண்டபத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு

திருவையாறு காவிரி படித்துறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் வைத்து புதுமண தம்பதிகள் மற்றும் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

DIN

தஞ்சாவூர்: திருவையாறு காவிரி படித்துறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் வைத்து புதுமண தம்பதிகள் மற்றும் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் காவிரியை வரவேற்கும் விழாவாகும்.  காவிரி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருள்களை வைத்து காவிரி தாயை வழிப்படுவார்கள். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT